செய்திகள்

மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம்: வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு

Published On 2018-09-01 17:46 IST   |   Update On 2018-09-01 17:46:00 IST
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மரங்களை வெட்டி கடத்தலை கண்காணிக்க தவறிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மஞ்சவாடியில் உள்ள வனப்பகுதியில் சிலர் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டினர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவள்ளியின் பரிந்துரையின்பேரிலும், தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்படி மரங்களை வெட்டி கடத்தலை கண்காணிக்க தவறிய பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சேரன், மஞ்சவாடி கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சுதா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தனி வட்டாட்சியர் (பொறுப்பு) செல்வகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News