செய்திகள்

வடமதுரை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்

Published On 2018-08-30 16:23 IST   |   Update On 2018-08-30 16:23:00 IST
வடமதுரை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

வேடசந்தூரில் இருந்து பூசாரிப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை இந்த பஸ் பூசாரிப்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த போது குரும்பபட்டி அருகே பின்னால் வந்த வாகனத்துக்கு வழி விடாததால் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் பஸ்சில் ஏறி டிரைவர் முருகனிடம் தகராறு செய்தனர். மேலும் இரு தரப்பினரும் பஸ்சுக்குள்ளேயே மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டிரைவர் முருகன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி வழக்கு பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News