செய்திகள்

புழல் ஜெயிலில் மாணவி வளர்மதி 4-வது நாளாக உண்ணாவிரதம்

Published On 2018-08-28 14:57 IST   |   Update On 2018-08-28 14:57:00 IST
புழல் ஜெயிலில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வளர்மதியுடன் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் நிதி திரட்டப்பட்டது. இதனை உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஸ்டாலின் என்பவர் தனது செல்போனில் படம் பிடித்ததால் தகராறு ஏற்பட் டது.

இது தொடர்பாக மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ்காரர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 25-ந் தேதி முதல் வளர்மதி ஜெயிலில் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நலம் தேறியதும் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர்.

இன்று வளர்மதி 4-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News