செய்திகள்

சென்னை புறநகரில் 8 செ.மீ. மழை

Published On 2018-08-28 09:19 GMT   |   Update On 2018-08-28 09:19 GMT
வட தமிழகத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.

சென்னை:

வட தமிழகத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.

இந்த மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்க நல்லுரில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. காட்டுக்குப்பம், மன்னார்குடி, நீடாமங்கலத்தில் 5 செ.மீ. தாம்பரத்தில் 4 செ.மீ., சோழவரம், மகாபலிபுரம், கேளம்பாக்கம், மேட்டுப்பட்டி, இளையாங்குடி, மயிலாடுதுறை, வேதாரண்யம், பரமக்குடி, ஏற்காடு, திருவாரூர், சித்தம்பட்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

புழல், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், தரமணி, செம்பரம்பாக்கம், தாமரைப்பாக்கம், வட சென்னை, பூந்தமல்லி, மீனம்பாக்கம் விமான நிலையம், கொளப்பாக்கம், பொன் னேரி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News