செய்திகள்

பண்பொழி - சுரண்டையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2018-08-27 09:38 GMT   |   Update On 2018-08-27 09:38 GMT
திருநெல்வேலி மாவட்டம் பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பண்டிகையையொட்டி அத்திப்பூ கோலமிட்டு பக்தர்கள் கொண்டாடினர்.
செங்கோட்டை:

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண திருவிழா நடைபெறும். இந்தாண்டும் பக்த பேரவை சார்பில் 7-ம் ஆண்டு திருவோண திருவிழா நடந்தது.

விழாவையொட்டி காலையில் அத்திப்பூ கோலமிடுதல் நிகழ்ச்சி மற்றும் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பக்த பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விழாவில் பண்பொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர்.

சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குழல்வாய் மொழியம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஷ்ராம் தலைமை வகித்தார். மேலும் பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ்ராம், பள்ளி முதல்வர்கள் பொன் மனோனியா, புஷ்பா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

ஓணம் பண்டிகையையொட்டி மாணவ, மாணவிகள் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். ஓணம் பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவ -மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினர்.
Tags:    

Similar News