செய்திகள்

செய்துங்கநல்லூரில் கைப்பந்து போட்டி

Published On 2018-08-24 11:50 GMT   |   Update On 2018-08-24 11:50 GMT
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சமூக நீதி மாணவர் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி இணைந்து செய்துங்கநல்லூரில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 8 அணியினர் பங்கேற்றனர்.
செய்துங்கநல்லூர்:

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சமூக நீதி மாணவர் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி இணைந்து செய்துங்கநல்லூரில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. த.மு.மு.க ஒன்றிய தலைவர் ஒலிபிக் மீரான் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இம்ரான்கான், சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் அசார், த.மு.மு.க கிளை தலைவர் கிர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 8 அணியினர் பங்கேற்றனர்.

இறுதி போட்டியில் என்.எஸ்.கே. அணியினரும், எஸ்.டி.என்.ஆர் அணியினரும் மோதினர். போட்டி நடுவராக மாஹீன், ஆதில் ஆகியோர் பணியாற்றினார். இதில் 2க்கு 1 என்ற கணக்கில் என்.எஸ்.கே அணி வெற்றி பெற்றது. 3-வது பரிசை டி.எம்.எம்.கே அணி பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசை த.மு.மு.க கிளையும், இரண்டாவது பரிசை கொம்பையா பாண்டியனும், மூன்றாவது பரிசை ராஜ்பாண்டியனும் வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் உஸ்மான்கான், பா.ம.க. மாநில துணை தலைவர் கசாலி, தோணி அப்துல் காதர், த.மு.மு.க மாவட்ட தலைவர் ஆசாத், ம.ம.க மாவட்ட செயலாளர் மோத்தி, மாவட்ட செயற்குழு காஜா முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பிரகான், ஹாரிஸ், நிய முத்துல்லா, பைசல்சமீர், ஆமீர், செய்யது, இம்ரான், அபுஹீரைரா முஸ்தாக், போத்திஸ் தமீம், ஜாவித், அப்சர், முசரப் ஜலால், ரில்வான், உளவஸ், யூசுப் உள்பட பலர் செய்திருந்தனர். #tamilnews
Tags:    

Similar News