செய்திகள்
பல்லடம் அருகே கார் மோதி விசைத்தறி தொழிலாளி பலி
பல்லடம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விசைத்தறி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பெரும்பாளியை சேர்ந்தவர் சீனிவாசன் (45) விசைத்தறி தொழிலாளி. இவர் சுக்கம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் சீனிவாசன் மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான சீனிவாசனுக்கு சுனிதா என்ற மனைவியும், சுருதி, நிவேதிதா ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.