செய்திகள்

பல்லடம் அருகே முயல்வேட்டையாட முயன்ற 2 பேர் கைது - வனத்துறை நடவடிக்கை

Published On 2018-08-22 15:45 GMT   |   Update On 2018-08-22 15:45 GMT
பல்லடம் அருகே முயல்வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூரை அடுத்த பல்லடம் கே.அய்யம்பாளையம் அருகே புத்தாண்டிபாளையம் பகுதியில் சிலர் வலை வைத்து முயல் வேட்டையாடுவதாக திருப்பூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட வன அதிகாரி மாரிமுத்து உத்தரவின்பேரில் திருப்பூர் வன சரக அதிகாரி மகேஷ் தலைமையில் வனவர் சுப்பையா மற்றும் ஊழியர்கள் புத்தாண்டிபாளையம் பகுதியில் அதிரடியாக நேற்றுமுன்தினம் மாலை ரோந்துப்பணியை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 2 வாலிபர்கள் வலை மற்றும் சுருக்கு கம்பிகளை வைத்து முயல் வேட்டையாட முயன்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி(வயது 30), பிரபு(24) என்பதும், இவர்கள் இருவரும் புத்தாண்டிபாளையத்தில் உள்ள செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் தங்கியிருந்து தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து வலையை கைப்பற்றி வெள்ளைச்சாமி, பிரபு ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். 2 பேருக்கும் தலா ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News