செய்திகள்

கைதான திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும்- மணியரசன்

Published On 2018-08-22 11:50 GMT   |   Update On 2018-08-22 11:50 GMT
மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர்:

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜ.நா. மன்றத்தில் தூத்துக்குடியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் படுகொலைகள், எட்டு வழிச்சாலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், இப்பிரச்சனைகளில் ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.

பின்னர் பெங்களூர் விமான நிலையத்தில் ஆக.9-ந்தேதி திருமுருகன் காந்தியை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜனநாயக மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதை எதிர்த்து மனித உரிமைப் போராளிகள் அனைவரும் போராட வேண்டும். மேலும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆங்காங்கே மனித உரிமைப் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், அரங்க குணசேகரன், திருநாவுக்கரசு, பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News