செய்திகள்

மாணவி குளிப்பதை செல்போனில் படம் எடுத்து மிரட்டல்- டெய்லர் கைது

Published On 2018-08-20 06:07 GMT   |   Update On 2018-08-20 06:07 GMT
பள்ளிகொண்டா அருகே பள்ளி மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) டெய்லர். அப்பகுதியில் உள்ள பிளஸ்-1 மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்.

பின்னர் அவர், அதனை மாணவியின் தாயாருடைய செல்போன் ‘வாட்ஸ்-அப்’பிற்கு அனுப்பி உள்ளார். இதைக்கண்டு மாணவியின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அதையடுத்து சிறிது நேரத்தில் அவர், மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ‘‘உனது மகள் குளிக்கும் படத்தை அழிக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும், மேலும் இதுகுறித்து குடும்பத்தினர், போலீஸ் உள்பட யாருக்கும் தெரிவிக்க கூடாது.

அவ்வாறு தெரிவித்தால் வீடியோவை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்’’ என மிரட்டி உள்ளார். மேலும் பணத்தை உடனடியாக தாம் தெரிவிக்கும் இடத்துக்கு வந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த மாணவியின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்.

அதில், வீடியோ அனுப்பியது மணிகண்டன் என்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து மாணவி குளிக்கும் வீடியோவை போலீசார் அழித்தனர். கைதான மணிகண்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News