செய்திகள்

போடி அருகே காற்றாலை மின்சாரத்துக்காக குளம் ஆக்கிரமிப்பு

Published On 2018-08-18 17:21 IST   |   Update On 2018-08-18 17:21:00 IST
போடி அருகே காற்றாலை மின்சாரத்துக்காக குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அம்பரப்பர் மலை அடிவாரத்தில் பெரியாறு குளம் உள்ளது. தென் மேற்கு பருவமழை காலத்தில் இந்த குளம் நிரம்பி ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதிக்கு பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது இந்த குளப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது.

மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் நீர் பாசன அமைப்புகள் புணரமைக்கும் திட்டத்தின் கீழ் கண்மாய் புணரமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1½ வருடத்தில் முடிக்க வேண்டிய பணி கிடப்பில் போடப்பட்டது.

காற்றாலைக்காக குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பல பகுதிகளில் மழை தீவிரமடைந்து விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த குளத்தை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News