செய்திகள்

மானாமதுரை அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2018-08-17 11:40 GMT   |   Update On 2018-08-17 11:40 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அருகே வைகையில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து 5 ஊராட்சி கிராம சபையில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

சிவகங்கை:

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர், வாகுடி ஆகிய பகுதிகளில் மணல் குவாரி நடத்த கடும் எதிர்ப்பு போராட்டம் நடந்துவருகிறது. மக்கள் எதிர்ப்பை மீறி தெ.புதுக்கோட்டையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் தொழில் தொடங்கியது. மக்கள் உண்ணாவிரத போராட்டம் காரணமாக கடந்த 14-ந் தேதி மணல்குவாரி நடைபெறவில்லை.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் தெ.புதுக்கோட்டை, மேல நெட்டூர், கீழ நெட்டூர், குறிச்சி, தெற்கு சந்தனூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளக்கூடாது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Tags:    

Similar News