செய்திகள்

வாஜ்பாய் மறைவு தேசத்திற்கு பேரிழப்பாகும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2018-08-17 14:34 IST   |   Update On 2018-08-17 14:34:00 IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee

புதுடெல்லி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பித் துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபர்களிடம் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்து சிறந்த முறையிலே பணியாற்றியவர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று முதன் முதலாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலக்கியவாதி. சிறந்த பேச்சாளர். மக்களிடத்திலே அன்பாக பழக கூடியவர். நிர்வாக திறமை மிக்கவர்.

அப்படிபட்ட தேசபற்றுள்ள மறைந்த பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழ் நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News