செய்திகள்

போலீஸ் தேர்வில் இட ஒதுக்கீடு இல்லாததால் அதிர்ச்சி - எஸ்.பி.யிடம் தேர்வர்கள் மனு

Published On 2018-08-16 10:41 GMT   |   Update On 2018-08-16 10:41 GMT
போலீஸ் தேர்வு முடிவில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இல்லாததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சீருடை பணியாளர் தேர்வு எழுதிய இளைஞர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் காவல் துறையினர் வாரிசுகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இந்த ஆணை வழங்கப்பட்டு இதற்கான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட எஸ்.பி. அனுமதியுடன் சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமத்துக்கு அனுப்பப்பட்டது.

கடந்த மார்ச் 11-ந் தேதி தேர்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் வெளியிடப்பட்டு அதற்கான தரவரிசைப்பட்டியல் ஆகஸ்ட்டு 11-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காவல்துறை வாரிசுகளுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்துக்கும் பெரும் ஏமாற்றமும் மன உளைச்சலாகவும் அமைந்துள்ளது.

ஏனெனில் கடந்த 1 வருடமாக இதற்கான பயிற்சியை முழு நம்பிக்கையுடன் மேற்கொண்டு இருந்த நிலையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்ட ஆணையின்படி 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News