செய்திகள்

பழவந்தாங்கலில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2018-08-16 09:05 GMT   |   Update On 2018-08-16 09:05 GMT
பழவந்தாங்கலில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, சூலம், குத்துவிளக்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:

சென்னை பழவந்தாங்கலை அடுத்த பூவரசம் பேட்டையில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இன்று காலையில் அம்மனை தரிசிக்க சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுபற்றி பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் அம்மன் சிலையை பார்த்தனர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க சரடு மற்றும் வெள்ளியிலான சூலம், குத்து விளக்கு ஆகியவை கொள்ளை போயிருந்தது.

சுமார் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். உண்டியலை உடைக்கும் முயற்சியை மேற்கொண்ட கொள்ளை கும்பல் உடைக்க முடியாமல் விட்டு சென்றனர்.

கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். ஆடி மாதத்தில் உண்டியலில் காணிக்கை பணம் அதிகம் இருக்கும் என்று நினைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அவர்களால் அம்மனின் நகைகளை மட்டுமே கொள்ளையடிக்க முடிந்தது.

கடந்த ஆண்டும் இதே போல ஆடி மாதத்தில் இந்த கோவிலில் கொள்ளையடித்துள்ளனர். அந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்குள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர்.

Tags:    

Similar News