செய்திகள்

பாசூர் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2018-08-10 16:12 IST   |   Update On 2018-08-10 16:12:00 IST
பாசூர் ரெயில் நிலையத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

பாசூர் ரெயில் நிலைய யார்டில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் வந்தது. அவர் இது தொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நீலம், சிவப்பு, வெள்ளை நிற கோடு போட்ட அரைக்கை டீ சர்ட்டும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்த அவர் சுமார் 160 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர். அவரது இடது பக்க மார்பில் ஒரு மச்சமும், நடு முதுகில் மச்சமும், வலது விலாவில் ஒரு மச்சமும் உள்ளது. இது குறித்து ஈரோடு ரெயில் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News