செய்திகள்
கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தி.மு.க. பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை
கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த திமுக பிரமுகர் துக்கம் தாங்காமல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தி.மு.க. பிரமுகர். இவர் 20 ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். இவர் கருணாநிதி அடக்கம் செய்யும் காட்சியை பார்த்து விட்டு துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினார்.
திடீரென அறைக்குள் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.