செய்திகள்

செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5லட்சம் பறித்த ஆசாமிகள்

Published On 2018-08-07 16:33 IST   |   Update On 2018-08-07 16:33:00 IST
ஈரோடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த சென்றவர்களில் ஒருவன் பிடிபட்டான். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

கரூரில் உள்ள இவரது உறவினர் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு பணத்தை பையில் வைத்தப்படி ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தார்.

பிறகு இவர் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம், “உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது” என்றான்.

உடனே அவரும் குனிந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் மாதேஸ்வரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்.. திருடன்” என்று கூக்குரலிட்டார். பிறகு அவரும் அக்கம்-பக்கத்தினரும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.

இதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

பிடிபட்ட ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் குமார் என்றும் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News