செய்திகள்

சேலம் அருகே உரிய ஆவணங்களின்றி செம்மண் கடத்தல் - டிப்பர் லாரி பறிமுதல்

Published On 2018-08-07 09:11 GMT   |   Update On 2018-08-07 09:11 GMT
சேலம் அருகே உரிய அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தி சென்றதால் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
நங்கவள்ளி:

சேலம் கனிம வளத்துறை (புவியியல் மற்றும் சுரங்கம்) துணை இயக்குநர் சுரேஷ் நேற்று இரவு 7.30 மணிக்கு ஜலகண்டாபுரத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, எடப்பாடி வட்டம் ஆடையூரிலிருந்து, தாரமங்கலம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தார்.

ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் அபராதம் மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க துணை இயக்குநர் சுரேஷ் மேட்டூர் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தார்.
Tags:    

Similar News