செய்திகள்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் 4 பேர் அதிரடி நீக்கம்

Published On 2018-08-03 05:31 GMT   |   Update On 2018-08-03 05:31 GMT
தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இறங்கியதையடுத்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.

ரசிகர் மன்றம் முழுவதும் கலைக்கப்பட்டு மக்கள் மன்றமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட மகளிர் அணி செயலாளர் அளித்த புகாரின் பேரில் ரஜினிகாந்த் தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெயபுஷ்பராஜ் மற்றும் இணை செயலாளர் பொன்சிவா ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இதே போல ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட போடி நகர செயலாளர் இளநீர் முருகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.ரஜினி இப்ராகிம் ஆகியோரும் மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.இளவரசன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

Tags:    

Similar News