செய்திகள்

ஆண்மையை நிரூபிக்க உடலுறவு வீடியோவை மாமனாருக்கு அனுப்பியவர் சிறையில் அடைப்பு

Published On 2018-08-01 14:27 GMT   |   Update On 2018-08-01 14:34 GMT
விவாகரத்துக்கான காரணமாக தன்னை ஆண்மையற்றவன் என மனைவி கூறியதால் வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை மாமனாருக்கு அனுப்பியவரை சென்னை போலீசார் கைது செய்தனர். #obscenevideotoinlaws #provepotency
சென்னை:

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த விபாவாசு (32) என்பவருக்கும் சென்னை கொடுங்கையூர்ரை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது 

ஐதராபாத்தில் ஒரு மாதம் மட்டுமே குடும்பம் நடத்திய இந்த தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் கணவரை பிரித்து கொடுங்கையூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

கணவர் வீட்டாரால் சித்திரவதைக்குள்ளானதாகவும், கணவருக்கு ஆண்மைக்குறைவு உள்ளதாகவும் குறிப்பிட்டு சென்னையில் இருந்து வக்கீல் மூலம் மனைவி சமீபத்தில் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் ஐதராபாத்தில் இருக்கும் விபாவாசுவை நிலைகுலைய வைத்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த விபாவாசு, தான் வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் காட்சியை இன்னொரு நபரின் மூலமாக படம்பிடித்து, சென்னையில் உள்ள தனது மாமனார் மற்றும் அவரது உறவுக்கார பெண்ணின் செல்போனுக்கு அனுப்பினார். 

மேலும், அவர்களுக்கு போன் செய்த விபாவாசு, என்னை ஆண்மை இல்லாதவன் என நீங்கள் எப்படி கூறலாம்? இந்த வீடியோவை பார்த்து என் ஆண்மையை புரிந்து கொள்ளுங்கள் என தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐதராபாத் போலீசார் உதவியுடன் விபாவாசுவை சமீபத்தில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். #obscenevideotoinlaws  #provepotency
Tags:    

Similar News