செய்திகள்

மதுரை அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்

Published On 2018-08-01 15:34 IST   |   Update On 2018-08-01 15:34:00 IST
மதுரை அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் மணியஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (வயது41). இவர் அரசு மதுபானக்கடையில் மேற் பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி கண்ணாமணி (36). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூர் சாலையிலுள்ள பாசிங்காபுரத்தில் இருந்து சிக்கந்தர் சாவடிக்கு சென்றனர். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வாலிபர் பின் தொடர்ந்து வந்தார்.

திடீரென பஞ்சாமிர்தம் ஓட்டிசென்ற இருசக்கர வாகனத்தில் வாலிபரின் பஞ்சாமிர்தம் வாகனம் மோதியது. நிலைகுலைந்த சமயத்தில் கண்ணாமணி அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை வாலிபர் பறிக்க முயன்றார்.

உடனே கண்ணாமணி வாலிபரின் கைகளை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேசி சோபியா, சப்- இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் விசாரனை செய்தனர். அவர் அருப்புகோட்டையை சேர்ந்த கலசலிங்கம்(25) என்று தெரியவந்தது. அவர் பறித்த நகையை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News