செய்திகள்

மனைவி புகார் கொடுக்கச் சென்றதால் போலீஸ் சூப்பிரண்டு ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

Published On 2018-07-28 16:21 IST   |   Update On 2018-07-28 16:21:00 IST
விருதுநகரில் குடும்ப தகராறு காரணமாக மனைவி புகார் கொடுக்க சென்றதால் போலீஸ் சூப்பிரண்டு ஆபீஸ் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர்:

விருதுநகர் பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தினிக்கும் (23), முகமது ரியாசுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் போதைக்கு அடிமையான முகமது ரியாஸ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து நந்தினியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

இதனால் மனம் நொந்து போன நந்தினி, கணவர் மீது புகார் கொடுக்க விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார்.

இதையறிந்த முகமது ரியாஸ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்றார். புகார் கொடுக்காதே என்று மனைவியிடம் வாக்குவாதம் செய்தார்.

திடீரென்று அவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News