செய்திகள்

அம்மா குழந்தைகள் பரிசு பெட்டகம் ஒப்பந்த அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி

Published On 2018-07-28 08:25 IST   |   Update On 2018-07-28 08:25:00 IST
அம்மா குழந்தைகள் பரிசு பெட்டக ஒப்பந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #AmmaBabyCareKit
சென்னை:

தமிழகத்தில், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்தின் கீழ், 1 லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்க தமிழக அரசு ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.

அரசு, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கும் வகையில் நிபந்தனைகளை வகுத்து உள்ளதாகவும். எனவே, இந்த ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், முகமது ரபிக் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘மனுதாரருக்கும், இந்த ஒப்பந்தத்திற்கும் சம்பந்தம் இல்லை. அதனால், 3-வது நபர் இதுபோன்ற வழக்கை தொடர முடியாது’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  #AmmaBabyCareKit
Tags:    

Similar News