செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டித்து கடலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-27 15:10 GMT   |   Update On 2018-07-27 15:10 GMT
சொத்து வரி உயர்வை கண்டித்து கடலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி பங்கேற்றார். #dmkprotest
கடலூர்:

நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வக்கீல் சிவராஜ், துணை அமைப்பாளர் வனராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின், நகர இளைஞரணி அமைப் பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர்கள் பிரசன்னா, ஜெயசீலன், ஒன்றிய துணைத்தலைவர் குணா, ஒன்றிய பொருளா ளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் திரைப்பட சங்க பொதுச்செயலாளர் மாருதி ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் பழனிவேல், அங்கமுத்து, நகர அவைத்தலைவர் ஷேக் மொய்தீன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், நிர்வாகிகள் ராமு, கோபாலகிருஷ்ணன், வேலு, முகமது யாசின், பூபாலன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmkprotest
Tags:    

Similar News