செய்திகள்
வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்
வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. #ThermalPowerStation
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண் டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாம் அலகில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். #ThermalPowerStation