செய்திகள்

குடிநீர் வழங்க கோரி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-07-26 17:07 IST   |   Update On 2018-07-26 17:07:00 IST
குடிநீர் வழங்க கோரி மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:

மதுரை மாநகராட்சி 55, 56-வது வார்டு (அனுப்பானடி, ஹவுசிங் போர்டு) பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News