செய்திகள்

100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2018-07-26 11:22 GMT   |   Update On 2018-07-26 11:22 GMT
100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டியில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:

பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி 100 நாள் வேலை வழங்க வேண்டும். வேலை கேட்டு மனு அளித்த 15 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும். வேலை வழங்காவிட்டால் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.

பெண்களுக்கு தனி வேலை அளவை தீர்மானிக்க வேண்டும். கூலி ரூ.224-க்கு குறைக்காமல் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிக்கு மாற்றக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகராஜ், விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் புவிராஜ், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க பெண்கள் உப குழுவை சேர்ந்த சுந்தரி, செட்டிகுறிச்சி மாரிச்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News