செய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு - தேடப்பட்ட மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்பு

Published On 2018-07-26 07:49 IST   |   Update On 2018-07-26 07:49:00 IST
கோவை பீளமேடு மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். #Coimbatore #HostelOwner
கோவை:

கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் விடுதி உரிமையாளர் ஜெகநாதனை (48) போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2 வருடங்களாக இயங்கி வரும் இந்த விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன், விடுதியில் தங்கிய மாணவிகள், இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்த பல்வேறு வகைகளில் முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் வார்டன் புனிதா (வயது 32), விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கனிவாக பேசி வலை விரித்துள்ளார். 

இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெகநாதன் மற்றும் புனிதாவை போலீசார் தேடி வந்தனர். இருவரும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகினர். அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.



இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த தனியார் ஜெகநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெல்லை ஆலங்குளம் அருகே கிணற்றில் இருந்து ஜெகநாதன் உடலை போலீசார் மீட்டனர். ஜெகநாதன் உயிரிழப்பு, தற்கொலையா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினமே விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலானோர் விடுதியை காலி செய்து வேறு விடுதிகளுக்கு சென்றுவிட்டனர். மும்பை, டெல்லி உள்பட வெளி மாநிலங்களை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் உள்ளனர். அவர்களும் விரைவில் வேறு விடுதிக்கு செல்லவிருகின்றனர். #Coimbatore #HostelOwner

Tags:    

Similar News