செய்திகள்

புதுவையில் சட்ட கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: 4 வாலிபர்களுக்கு வலைவீச்சு

Published On 2018-07-21 22:07 IST   |   Update On 2018-07-21 22:07:00 IST
சட்ட கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாபர்அலி (வயது26). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்து சட்ட கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மோந்திரேஸ் வீதி வழியாக சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் திடீரென ஜாபர்அலி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்கள். இதனை ஜாபர்அலி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ஜாபர்அலியை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து ஜாபர்அலி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஜாபர்அலியை தாக்கிய 4 வாலிபர்களை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News