செய்திகள்

கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

Published On 2018-07-21 20:01 IST   |   Update On 2018-07-21 20:01:00 IST
கீழ்வேளூர் அருகே பணத் தகராறில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வலிவலம் சிவன் கீழவீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் வேதாரண்யம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (26). இவரது வீட்டுக்கு கடந்த 19-ந் தேதி இரவு 11 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்து கணவன்-மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தாக்கியவர்களை பிடிக்க முயற்சித்தனர். அப்போது 2 பேர் மட்டும் பிடிப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் வலிவலம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அசோக்குமாரின் மனைவி மாலதிக்கு பேஸ்புக் மூலம் கோவையை சேர்ந்த அமுதன் என்ற டாக்டருடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் முலம் மாலதி பல்வேறு காரணங்களை கூறி  சிறுக சிறுக ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பிடிப்பட்ட வாலிபர்கள் தெரிவித்தனர். ஆனால் தனது மனைவி 8-ம் வகுப்பு மட்டும் படித்துள்ளதாகவும் முகநூல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று அசோக்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார். 

இதையடுத்து வலிவலம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கைதானவர்கள் திருவாருர் கம்பர் தெருவை சேர்ந்த முத்து (22), திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்த அஜய் (24) என்று தெரியவந்தது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுவிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News