செய்திகள்

அப்பல்லோவில் ஆய்வு நடத்த ஆட்சேபனை இல்லை - பிரதாப் ரெட்டி பேட்டி

Published On 2018-07-19 09:13 GMT   |   Update On 2018-07-19 09:13 GMT
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்த ஆட்சேபனை இல்லை என்று அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறினார். #JayaDeathProbe #PrathapReddy #ApolloHospital
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரை யார்-யார்? வந்து பார்த்தார்கள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் தலைவர் பிரதாப் சி.ரெட்டியை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா விசாரணை ஆணையம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது:-



ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எங்கள் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அதன்படி எங்கள் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி வருகின்றனர்.

ஆணையத்தின் விசாரணையை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் ஆணையம் ஆய்வு செய்யலாம். எந்த ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathProbe #PrathapReddy #ApolloHospital
Tags:    

Similar News