செய்திகள்
நாகையில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்வது குறித்த கருத்து கேட்பு கூட்டம்
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகையில், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்வது குறித்து அனைத்து அரசியல் கட்சியினரின் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருகிற பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு நாகை மாவட்டத்திற்குட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினரின் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கிராம பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கும், நகர்புறங்களில் 1,400 வாக்காளர்களுக்கும் மேலாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் கிராம பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 வாக்குச்சாவடிகளையும், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளையும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 வாக்குச்சாவடிகளையும், பிரிப்பது தொடர்பாகவும், பழுதடைந்த 74 வாக்குச்சாவடிகளை மாற்றி அதே அமைவிடத்தில் உள்ள வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யவும், அதேபோல 24 வாக்குசாவடிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பாகவும், கருத்துக்கள் கோரப்பட்டது.
இதையடுத்து அரசியல் கட்சியினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, கிராமபுறங்களில் 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள 9 வாக்குச்சாவடிகளை வாக்காளர்களின் வசதிக்காக பிரிக்கப்படும் எனவும், பயன்படுத்த இயலாதநிலையில் உள்ள வாக்குசாவடி மையங்கள் மற்றும் பெயர் மாற்றப்படும் எனவும், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் வசதிக்காக மின்சார வசதி, குடிநீர்வசதி, சாய்தள வசதி, கழிப்பிட வசதிகள் ஆகியவை அமைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.
கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.