செய்திகள்

சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு எதுவும் இல்லை - அமைச்சர் சரோஜா பேட்டி

Published On 2018-07-15 02:23 GMT   |   Update On 2018-07-15 02:23 GMT
சத்துணவுக்கு விதிமுறை களை பின்பற்றியே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 54 ஆயிரத்து 490 அங்கன்வாடி மையங்களில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை, மசாலா முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு 2013-ல் இருந்து சத்துணவு உண்ணும் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு தரமான முட்டைகளை வழங்குவது மட்டும் இல்லாமல், முட்டை கொள்முதல் செய்வதில் மாநில அளவில் வெளிப்படையாக ஒரேவிதமான ஏலமுறையே நடைமுறையில் உள்ளது.

2013-ல் இருந்து எந்த ஒரு புகாரும் இல்லாமல் விதிமுறைகளை பின்பற்றி முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 58 லட்சம் முட்டை ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு முறைகேடோ அல்லது புகார்களோ இல்லாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #EggProcurement #MinisterSaroja
Tags:    

Similar News