செய்திகள்

திருக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய கூலித்தொழிலாளி கைது

Published On 2018-07-12 16:01 IST   |   Update On 2018-07-12 16:01:00 IST
திருக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே விநாயகம்பட்டை சேர்ந்த 15 வயது மாணவி சோரப்பட்டு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் அந்த மாணவி இல்லை.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருக்கனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கூலித்தொழிலாளி கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரனையில் மாணவியை கூலித்தொழிலாளி கடத்தி சென்று நோணாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நோனாங்குப்பத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். கூலித்தொழிலாளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கூலித்தொழிலாளிக்கு 17 வயதே ஆவதால் அவரை அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News