செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

Published On 2018-07-06 09:44 GMT   |   Update On 2018-07-06 09:44 GMT
என்ஜினீயரிங் படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

சென்னை:

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் நேரடை கலந்தாய்வும் நடைப் பெறுகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதலில் கண்பார்வை குறைந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.

இதையடுத்து காது கேளாதோர், ஆட்டிசம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இன்று நடந்த கலந்தாய்விற்கு 320 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 167 பேர் விண்ணப்பங்கள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது.

சிறப்பு பிரிவு கலந்தாய்வில் குறைந்த அளவில்தான் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பு பிரிவினருக்கான மொத்த இடங்கள் 7175 ஆகும்.

நாளை (சனிக்கிழமை) முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு 10-ந்தேதிக்கு பின்னர் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நாளையுடன் நிறைவடைவதால் அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவு கலந்தாய்வை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

Tags:    

Similar News