செய்திகள்

சேலத்தில் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் ஜெயிலில் அடைப்பு

Published On 2018-07-03 21:53 IST   |   Update On 2018-07-03 21:53:00 IST
மின்வாரிய ஊழியர் ஒருவர், சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவர், மரவனேரியில் உள்ள அரசு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயராமன் நேற்று மாலையில் மளிகை கடைக்கு மிட்டாய் வாங்குவதற்காக சென்ற 6 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜெயராமனை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ஜெயராமன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இன்று காலையில் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பாக ஜெயராமனை வேனில் அழைத்துச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News