செய்திகள்

சிறப்பாக சேவை புரிந்த 486 டாக்டர்களுக்கு விருது - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்

Published On 2018-06-29 09:45 GMT   |   Update On 2018-06-29 11:49 GMT
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த சேவை புரிந்த 486 மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். #MinisterVijayabaskar #BestDoctorsAward
சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த சேவை புரிந்த 25 மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் 461 மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

சிறந்த சேவை புரிந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் திட்டம் அம்மாவின் சிந்தனையில் உதித்த ஒரு முத்தான திட்டம். இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ரூ.50,000க்கான காசோலையும், சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் கூடிய “சிறந்த மருத்துவர்கள் விருது” வழங்கும் திட்டத்தினை 2012-ல் தொடங்கி வைத்தார்.

அம்மாவின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் முதல்-அமைச்சர் புதிய திட்டங்களை வழங்குவதற்கு தொடர்ந்து மக்கள் நல் வாழ்வுத் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார். தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்களின் இறப்பு விகிதம் தேசிய இலக்கைவிட பாதியாக குறைந்து சாதனை புரிந்துள்ளது.


ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமி ருந்து ரூ.1,634 கோடி நிதி உதவி பெற்று தமிழ்நாடு நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவை மேம்படுத்தப்படும்.

மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் இதுவரை 10858 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மருத்துவக் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலை விரைவில் எய்தப்படும். விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்காக அமையும்.

அம்மாவின் கனவை நினைவாக்கும் வகையில் தொடர்ந்து தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ அனைவரும் சிறப்பாக செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #MinisterVijayabaskar #BestDoctorsAward
Tags:    

Similar News