செய்திகள்

சிகிச்சைக்காக ரெயில்வே ஊழியர்களின் குழந்தையுடன் 2 பேர் பயணிக்க அனுமதி

Published On 2018-06-26 22:33 GMT   |   Update On 2018-06-26 22:33 GMT
சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #IndianRailway #PiyushGoyal
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வேறு இடங்களுக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள், இதுவரை டாக்டர் அனுமதி பெற்று தங்களுடன் பெற்றோரில் ஒருவரை மட்டுமே ரெயிலில் இலவசமாக அழைத்து சென்று வந்தனர். இதனால் பெற்றோரை பிரிந்து ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தவித்தனர். ரெயில்வே ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இந்த விதிகளை தளர்த்தி உள்ளார்.

அதன்படி இனிமேல் சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக அழைத்துச் செல்லலாம். நோய் பாதிப்புக்கு உள்ளான ரெயில்வே ஊழியர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்களுடன் 2 பேரை அழைத்து செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ரெயில்வே ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #IndianRailway  #PiyushGoyal #Tamilnews

Tags:    

Similar News