நெல்லை - சென்னை இடையே 95 சிறப்பு ரெயில்கள்
மதுரை:
மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை- சென்னை இடையே மதுரை, விருதுநகர் வழியாக 95 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06001) இயக்கப்படுகிறது. இது ஜூலை 6, 13, 20, 27-ந் தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.50 மணிக்கு நெல்லை செல்லும்.
இதேபோல நெல்லை- எழும்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06002) ஜூலை 8, 22, 29-ந்தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.15 மணிக்கு எழும்பூர் செல்லும்.
இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
தாம்பரம்-கொல்லம் இடையே வாரம் 3 நாட்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06027) இயக்கப்படுகிறது. இது ஜூலை 2 முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10 மணிக்கு கொல்லம் செல்லும்.
இதேபோல கொல்லம்- தாம்பரம் இடையே வாரம் 3 நாட்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06028) இயக்கப்படுகிறது.
இது ஜூலை 3-ந்தேதி முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரை செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குண்டாராவில் நின்று செல்லும்.
சென்னை சென்டிரல்- நாகர்கோவில் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06007) இயக்கப்படுகிறது.
இது ஜூலை 3, 10, 17, 24, 31-ந் தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை11.05 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
இதேபோல நாகர்கோவில்-சென்டிரல் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06008) இயக்கப்படுகிறது.
இது 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்டு 1-ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 7.20 மணிக்கு சென்டிரல் செல்லும்.
இது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூரில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரெயல்களுக்கான முன்பதிவு நடந்து வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Train