செய்திகள்

பல்லடத்தில் காதல் தோல்வியால் மில் தொழிலாளி தற்கொலை

Published On 2018-06-21 15:27 IST   |   Update On 2018-06-21 15:27:00 IST
பல்லடத்தில் காதல் தோல்வியால் மில் தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 29). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாத்ரூமுக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமுக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்த நிலையில் துடிதுடித்தார்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் மணிவேலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மணிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் மணிவேல் தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று போலீசார் கூறினர்.

Tags:    

Similar News