செய்திகள்

திருத்தணி கோவிலில் 26 நாட்களில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்

Published On 2018-06-20 08:04 GMT   |   Update On 2018-06-20 08:04 GMT
கடந்த 26 நாட்களில் திருத்தணி கோவிலுக்கு உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 825 ரூபாய் கிடைத்திருக்கிறது.
பள்ளிப்பட்டு:

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்கிறார்கள். கடந்த 26 நாட்களில் திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காணிக்கையை எண்ணினார்கள்.

இதில் கோவிலுக்கு கிடைத்த பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் தனித்தனியாக கணக்கிடப்பட்டது. இதன் விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த 26 நாட்களில் திருத்தணி கோவிலுக்கு உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 825 ரூபாய் கிடைத்திருக்கிறது.

882 கிராம் தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 5 கிலோ 75 கிராம் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Tags:    

Similar News