செய்திகள்

வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை

Published On 2018-06-19 11:45 GMT   |   Update On 2018-06-19 11:45 GMT
வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.

பின்னர் மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டது. சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன.

மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 18 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெத்தநாயக்கன் பாளை யத்தில் 13, சங்ககிரியில் 5, ஆத்தூரில் 3.4, எடப்பாடி மற்றும் ஏற்காட்டில் 1 மி.மீ. மழை என மொத்தம் மாவட்டம் முழுவதும் 41.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News