செய்திகள்

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-13 11:14 GMT   |   Update On 2018-06-13 11:14 GMT
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்:

டாஸ்மாக் ஊழியர்களின் பணிவரன்முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறிவித்திட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

எஸ்சி,எஸ்டி. பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை தலைவர் குருவேல் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News