செய்திகள்

கரிக்கலாம்பாக்கத்தில் தந்தையை தாக்கிய மகன்கள் கைது

Published On 2018-06-10 18:33 IST   |   Update On 2018-06-10 18:33:00 IST
கரிக்கலாம்பாக்கத்தில் தந்தையை தாக்கிய மகன்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் திருக்குறளார் நகரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 65). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து தற்போது வயது முதிர்ச்சி காரணமாக வீட்டில் இருந்து வருகிறார்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், அமிர்தராஜ் (36), அன்பரசன் (30), பாலமுருகன் (20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள தணிகாசலம் அடிக்கடி மது குடித்து விட்டு தனது மனைவி ஜானகியிடம் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் நேற்றும் தணிகாசலம் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன்கள் அமிர்தராஜ், அன்பரசன், பாலமுருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தணிகாசலத்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தணிகாசலம் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் பெரியசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அமிர்தராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News