செய்திகள்

திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை மது - கஞ்சாவுக்கு அடிமையாக்கி உல்லாசம்

Published On 2018-06-10 16:35 IST   |   Update On 2018-06-10 16:50:00 IST
திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாக்கி உல்லாசமாக இருந்த வாலிபர்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி வந்தார். பள்ளி விடுமுறையையொட்டி சிறுமி வீட்டில் இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் சகஜமாக பழகினார். இதனை பயன்படுத்திய அவர்கள் மாணவிக்கு மது பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக்கினர்.

மேலும் மாணவியை வெளி இடங்கலுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தனர். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அவருக்கு மது, கஞ்சா பழக்கம் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

மேலும் வாலிபர்கள் பலர் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் திருவள்ளூர் டவுண் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 7 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவியிடம் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News