செய்திகள்

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார்

Published On 2018-05-27 08:18 GMT   |   Update On 2018-05-27 08:18 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்தவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று ஆறுதல் கூறினார். #SterliteProtest #TNMinister #KadamburRaju
தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவர்களை சந்திக்கவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று காலை தூத்துக்குடி வந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி கமி‌ஷனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். அமைதி நடவடிக்கைக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தில் சேதம் அடைந்த பகுதிகளையும் எரிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார். கலவரம் ஏற்பட்ட பகுதிகளுக்கும் சென்று ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டதுடன் பொது மக்களையும் சந்தித்தார்.


அங்கிருந்து, அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாளை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மேலும் சில அமைச்சர்கள் தூத்துக்குடி செல்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்கள். கலவரம் பாதித்த பகுதிகளையும் சென்று பார்வையிடுகிறார்கள். #Thoothukudi #SterliteProtest #TNMinister #KadamburRaju
Tags:    

Similar News