செய்திகள்

பரமக்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுக்கு ‘கேக்’ ஊட்டும் பெண் போலீஸ் - வாட்ஸ்-அப் வீடியோவால் பரபரப்பு

Published On 2018-05-27 04:23 GMT   |   Update On 2018-05-27 04:23 GMT
இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி காவல்நிலையத்தில் சீருடை இருந்த பெண் போலீஸ் ஒருவர் பணியில் இருந்த ஏட்டு-க்கு கேக் ஊட்டும் வீடியோ காட்சி 'வாட்ஸ்அப்பில்' பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இராமநாதபுரம்:

சமூக வலை தளங்களான ‘வாட்ஸ்-அப்’, பேஸ்புக் போன்றவை எந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியில் மக்களுக்கு பயனைத் தருகின்றனவோ, அந்த அளவிற்கு கெடுதலையும் தருகிறது. அதே நேரம் சிலரின் தவறுகளையும் வெளிக்கொண்டு வந்து விடுகிறது.

அப்படி வெளியான ஒரு ‘வாட்ஸ்-அப்’ தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதில் சீருடை அணிந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கேக் ஊட்டுகிறார். இந்த ‘வைரல்’ வேகமாக பரவியதால் காவல் துறை விசாரணையில் இறங்கியது. அந்த காட்சிகள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் நடந்தவை என தெரிய வந்தது. சீருடையில் இருப்பவர் பரமக்குடி தாலுகா போலீஸ் ஏட்டு மாரியம்மாள்.

இவர், அருகில் உள்ள பரமக்குடி நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் டீ டைம் உரையாடலில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு முத்துப்பாண்டிக்கு கேக் ஊட்டியதை சக போலீஸ்காரர் படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் வைரலாக்கி உள்ளார்.

பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி சொல்பவரை அடித்து உதைத்த சம்பவம் ‘வாட்ஸ்- அப்’ மூலம் பரவியது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் போலீஸ் ஏட்டுகளின் இந்த காட்சி ‘வாட்ஸ்-அப்’களில் வைரலாகி உள்ளது.

கண்காணிப்பு காமிராக்களை போலீஸ் நிலையங்களில் பொருத்தினால் குற்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News