செய்திகள்

முதலியார்பேட்டையில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-05-24 17:28 IST   |   Update On 2018-05-24 17:28:00 IST
முதலியார்பேட்டையில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பக்கவாதநோய் முற்றிலுமாக குணமாகவில்லை. இதனால் தினம் தினம் லூர்துசாமி அவதி அடைந்து வந்தார்.

நேற்று காலை லூர்துசாமியை ஆஸ்பத்திரிக்கு செல்ல தயாராகும்படி அவரது மகன் தூயமணி கூறினார். இதையடுத்து லூர்துசாமி குளித்து விட்டு வருவதாக கூறி குளியலறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் லூர்துசாமி குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த தூயமணி குளியலறைக்கு சென்று பார்த்தார். உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் குளியலறையை உடைத்து பார்த்தார். அங்கு லூர்துசாமி துணி தொங்கவிடும் ஹேங்கரில் துப்பட்டாவால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News