செய்திகள்

தேவைப்பட்டால் பி.காம் இடங்கள் அதிகரிக்கப்படும் - கல்லூரி கல்வி இயக்குனர் பேட்டி

Published On 2018-05-17 09:25 GMT   |   Update On 2018-05-17 09:25 GMT
இந்த வருடம் அதிகளவு விண்ணப்பம் வந்தால் கூடுதலாக பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவு இடங்கள் உருவாக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறினார்.
கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறியதாவது:-

கடந்த வருடத்தை போல இந்த ஆண்டும் பட்டப்படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. எந்தெந்த பகுதியில் தேவை அதிகமாக உள்ளது என்பதை அறிந்து முன் கூட்டியே விண்ணப்பம் வினியோகம் தொடங்கப்பட்டு விட்டது.

பி.காம், பி.ஏ., பி.பி.ஏ., கலை பாடப்பிரிவுகளிலும் பி.எஸ்.சி. அறிவியல் பாடப்பிரிவுகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்வு முடிவு வெளிவந்து 10 வேலை நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இதுவே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்ற பாடப்பிரிவு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்

தேர்வானவர்களின் முதல் பட்டியல் ஜூன் 2-வது வாரத்திற்குள் வெளியிடப்படும். அதன் பின்னர் விடுபட்டவர்கள், தாமதமாக விண்ணப்பித்தவர்கள் போன்றவற்றை ஆய்வு செய்து 2-வது பட்டியல் வெளியிடப்படும்.

அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த வருடம் அதிகளவு விண்ணப்பம் வந்தால் கூடுதலாக பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவு இடங்கள் உருவாக்கப்படும். தேவையை பொறுத்து இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News